ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து மீனவர்களை உடனடியாக மீட்கக் கடிதம் வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (27/11/2024) டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன் பொம்மையபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரை கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த நவம்பர் 14-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளார். தற்போது குஜராத் மாநிலம் போர் பந்தரிலிருந்து 100 நாட்டிகல் மைல் தொலைவில் அண்ணாதுரை கடலில் தவறி விழுந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவரை போர்க்கால அடிப்படையில் மீட்க வலியுறுத்தியும், லட்சத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று, கடிதம் வழங்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.