கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள பன்னி மேடு பங்களா டிவிஷன்பகுதியில் உள்ள ரேஷன் கடையை யானை உடைத்து பல நாட்கள் ஆகியும் அதை சரி செய்து கொடுக்கவில்லை என்று பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் உடைந்த ரேஷன் கடையை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் 400 கார்டுகள் உள்ள கடையை மேம்படுத்தி புதுப்பித்து தர வேண்டும் பொதுமக்கள் ரேஷன் பொருள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இந்த பகுதியில் அதிக அளவு யானைகள் வந்து செல்கிறது பள்ளி பொதுமக்கள் அதிகளவில் ஓடி வாழும் நேரத்தில் யானைகளை விரட்டுவது சவாலாக உள்ளது ஆகையால் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.