வால்பாறை: ஏடிஎம் மையங்களில் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் அட்டையை மாற்றி கொடுத்து பணத்தை ஏமாற்றிய நபரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை அடுத்து உள்ள நல்ல முடி எஸ்டேட் பகுதியில் உள்ள முருகம்மாள் வயது 45,கணவர் பெயர் மணிவேல் அவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையத்தின் காவலாளி இல்லாமல் அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த நஜீப் வயது (36) என்பவரிடம் பணம் எடுத்து தந்து உதவுமாறு கேட்டனர். கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதி சேர்ந்தவர் நஜீப் அப்பகுதியில் வரும் பல நபர்களுடைய ரகசிய ஏடிஎம் நம்பரை வைத்து வெவ்வேறு ஏடிஎம் கார்டுகளை கொடுத்து விடுபவர் என்று தெரியாமல் முருகம்மாள் ஏமாந்துவிட்டார்.
17 .11. 20 24 வால்பாறை ஸ்டேட் பேங்கில் முருகம்மாள் புகார் தெரிவித்தார். வால்பாறை துணை காவல் நிலைய கண்காணிப்பாளர் ஆலோசனையின் படி வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் நேற்று 20 11 20 24 காலை வால்பாறை நடுநிலை ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் சந்தேகத்தின் படி நின்ற நஜீபை விசாரணை செய்தனர்.
அவரிடம் 44 ஏடிஎம் கார்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. அவர் முதியவர்களையும் படிப்பறிவில்லாதவர்களையும் எளிதாக பேசி அவர்களிடம் உள்ள ஏடிஎம் கார்டு மட்டும் ரகசிய நம்பர்களை வைத்து பணத்தை வெவ்வேறு ஏடிஎம் மையங்களில் எடுத்து விடுவார் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவரிடம் இருந்த 5290 ரூபாய் பணத்தையும் 44 ஏ டி ம் கார்டுகளையும் பறிமுதல் செய்து நஜீப் என்ற நபரை கைது செய்தனர்.
வழக்கு பதிவு செய்த பிறகு கேரளா மாநிலம் எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு இதே போன்ற வழக்கு இந்த நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ள்ளது.
வால்பாறை காவல்துறையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.