கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அண்ணா நகர் செல்லும் வழியில் நடுமலை பாலம் அருகாமையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியே சென்று கொண்டு இருந்தது. உடனடியாக நடவடிக்கை….
வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொண்டனர் இதனால் வால்பாறை பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை இனிமேல் இருக்காது ஏனெனில் பெரும் சேதம் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுத்தனர். இதை வால்பாறை பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து,
-திவ்யக்குமார்.