தேசிய அளவில் கோவாவில் ஞாயிறு அன்று டெகாத்லான் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் இராமநாதபுரம் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் V.நிரஞ்சன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.
இம்மாணவனை பொள்ளாச்சி வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டாரவள ஆசிரியப்பயிற்றுநர்கள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைத் தலைவர் மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத் தலைவர், செயலர் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பள்ளியின் ஆசியர்கள், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆசிரியர்கள் இம்மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திலுக்காக,
-ப. செந்தில் குமார்.