கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள உருளிக்கல் பகுதியில் பயங்கர விபத்து. அரசு பஸ் சேக்கல் முடி பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்து கொண்டிருந்தது. உருளிக்கல் மானாம்பள்ளி சோதனை சாவடி அருகே உள்ள அனலி எஸ்டேட்
பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி எதிரி வந்த அரசு பேருந்தின் மீது மோதியது, பஸ்ஸில் பயணம் செய்த பொதுமக்கள் மற்றும் லாரியில் வந்த அனலிக் எஸ்டேட் ஓட்டுநர் பிரகாஷ் வயது 39,
தனுஷ் வயது 34, விமல் ராஜ் 28, ராஜ் 40 தங்கப்பாண்டி வயது 35 ஆகியோரை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-திவ்யகுமார் வால்பாறை.