கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் 14 வருடங்களுக்கு பிறகு, இன்று 12.12.24 கும்பாபிஷேக விழா கோலாகலமாக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் இசை கச்சேரி, பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாசாணி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வாக கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது
இந்நிகழ்வின் போது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
மேலும் இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.