ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர் கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில், ‘பாக்சிங் டே’ போட்டியாக துவங்குகிறது. இந்திய அணியைப் பொருத்தவரை பாக்ஸிங் டே டெஸ்ட் மிகவும் முக்கியமானது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்க முடியும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியமானது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.