எங்களின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு கொடுங்கள் CITU ஆட்டோ சங்க நிர்வாகிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியிடமும் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை CITU ஆட்டோ சங்க நிர்வாகிகள் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொடுங்கள் என்று பொள்ளாச்சி சார் அலுவலகத்திலும், வட்டார போக்குவரத அதிகாரி இடமும் மனு கொடுத்தனார்.

தமிழக முதல்வர் 30-07-2021 அண்டு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 காசு அறிவித்து இன்று வரை வழங்கவில்லை என்கிற நிலையில் தற்பொழுது அவர்களுக்கு சுமார் 550 ரூபாய்க்கு மேல கிடைக்க வேண்டும் அதனால் கிடைக்கவில்லை தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம், வனவிலங்கு தொல்லை,அடிப்படை வசதிகள் கிடையாது மேலும் வால்பாறையில் மாற்றுத் தொழில் இல்லை இதனால் திருப்பூர்,கோவை, ஈரோடு உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள மக்கள் சென்று விட்டனர்.

தற்பொழுது வால்பாறையில்விரல் விட்டு என்னும் அளவுக்கு சுமார் 30 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கின்றனர் இந்நிலையில் சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு வழி பாதையாக மெயின் ரோடு உள்ளது இன்னும் சொல்லப்போனால் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் வெளியூரில் இருந்து வருபவர்கள் வாகனத்துடன் வருவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குறிப்பாக பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஆட்டோவை வாடகைக்கு எடுப்பதும் இல்லை ஆட்டோ ஓட்டுநர்கள் வால்பாறை கீழ் பேருந்து நிலையத்திலிருந்து மேல் பேருந்து நிலையம் வருவதற்கும் சுமார் அரை மணி நேரம் ஆகிறது அப்பொழுது அவர்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாகன வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற பலவேறு காரணங்களால் ஏற்கனவே ஆட்டோ வைத்திருப்பவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் குறிப்பாக ஒரு சிலர் இந்த தொழிலை விட்டுட்டு வேற தொழிலுக்கு போய் விட்டார்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு தற்பொழுது புதிதாக ஆட்டோ இயக்குவதற்கு அனுமதி வழங்கினால் இவர்களைப் போல புதிதாக வாங்குபவர்களும் பாதிப்பார்கள் எனவே மதிப்புக்குரிய சார் சார் ஆட்சித் தலைவர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வால்பாறையிலே அதிகம் மக்கள் தொகை கொண்டுவதற்கு மேற்கொண்ட கோரிக்கைகளை செய்து கொடுங்கள் புதிதாக ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறோம் என்று CITU ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நாமும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் இதுகுறித்து பேசினோம் அவர்களும் வால்பாறையில் தற்பொழுது இருக்கும் மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைவு ஏற்படுகிறது. பல எஸ்டேட் பகுதிகளில் தரமான சாலை வசதிகள் இல்லாமல் அடிக்கடி ஆட்டோக்கள் பழுது ஏற்படுகிறது. நாங்கள் ஆட்டோவை ஓட்டி மிக சிரமத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதை வைத்து தான் குழந்தைகளைப் படிக்க வைப்பது மருத்துவ செலவு பார்ப்பது இதர செலவுகளை பார்ப்பது மிகவும் கடினமானது எங்களைப் போன்றும் புதிதாக ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி கிடைத்தால் அவர்கள் பாதிப்பார்கள் அவர்களே யார் வாங்கச் சொல்கிறார்களோ அவர்கள் பயனடைவார்கள் என்று வேதனையோடு நம்மிடம் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp