கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று டாட்டா நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி பெறுவதற்காக குறைதீர்க்கும் கூட்டம் டாடா டி விளையாட்டு மைதானத்தில் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் வந்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அதிகாரியிடம் நாங்கள் எத்தனை முறை கோவையில் உள்ள பி எப் அலுவலகத்திற்கும், எஸ்டேட் நிர்வாகத்திற்கும் எங்கள் வருங்கால வைப்பு நிதியே பெறுவதற்கு செலவு செய்தும் எந்த ஒரு பயனும் இல்லை என்று கேள்வி எழுப்பினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்கள் கேள்விக்கு எஸ்டேட் நிர்வாகமும், வருங்கால வைப்பு நிதி அலுவலர்களோ சரியான காரண விளக்கங்கள் சொல்ல முடியவில்லை காரணம் வருங்கால வைப்பு நிதி பெறுவதற்கு தற்பொழுது இணையதள சேவை மிக முக்கியமானது இப்பகுதியில் சரியாக இணையதள சேவை கிடைக்கவில்லை இதனால் அதிகாரிகள் கவலை அடைந்தனர்.
50 ஆண்டுக்கு முன்பாக எஸ்டேட்டில் வேலை செய்பவர்களின் பெயர்,பிறந்த தேதி, ஊர் அனைத்தும் வாய்மொழி உத்தரவாக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஒரு சில நிர்வாகங்களில் அதிகாரிகளே தனது இஷ்டத்துக்கு பெயர்களையும் பிறந்த தேதிகளையும் பதிவு செய்து அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் நோக்கில் செய்தனர்.
தற்பொழுது மத்திய அரசு ஆதார் அட்டை அறிமுகப்படுத்தும் படுத்தும்போதும் தனது இலக்கு முடிக்க வேண்டும் என்பதற்காக இதே நிலை ஆனால் இப்பொழுது தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திலும் ஆதார் அட்டையிலும் சரியான முறையில் பெயர் பிறந்த தேதி முகவரி இல்லை பல வருடங்களாக பல வேறு இன்னல்களுக்கு இடையே உழைத்த வருங்கால வைப்பு நிதி பெற முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர் ஒரு சிலர் இடைத்தரகர் மூலம் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் பயனில்லாமல் இருக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிர்வாகம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று தொழிலாளர்களிடம் சொல்லுகிறார்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகமோ எஸ்டேட் நிர்வாகத்தை பாருங்கள் என்று இரு தரப்பும் மாறி மாறி சொல்வதால் தொழிலாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் வேதனை அடைகின்றன இவர்களின் குறைய தீர்க்க வால்பாறைகளை இணையதள சேவையுடன் வருங்கால வைப்பு நிதி கிளை அலுவலகம் திறக்கப்பட்டால் வாரத்தில் ஒரு நாள் ஒவ்வொரு எஸ்டேட் நிர்வாகத்தில் இருந்தும் அலுவலகத்திற்கு வந்து தொழிலாளர்கள் பிரச்சினையை எளிதாக தீர்த்து வைக்கலாம் இடைத்தரர்களிடமிருந்து இருந்து தொழிலாளர்களே பாதுகாக்க முடியும் பல தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி பெற முடியாமல் தேயிலை செடிக்கு உரம் ஆகிவிட்டார்கள் என்பது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு வால்பாறையிலே வருங்கால வைப்பு நிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்ற சி ஐ டி யு தொழிற்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக சி ஐ டி யூ நிர்வாகிகள் கூறுகையில் ஐந்து தொழிற்சங்கங்கள் நிர்வாக உதவியுடன் மொத்தமாக பல லட்ச ரூபாய் சந்தாவாக ஒரே தொகையாக வாங்கிக் கொள்கிறார்கள் மவுனமாக இருக்கிறார்கள் நாங்கள் தான் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் என்று வீர வசனமும் பேசுகிறார்கள் தொழிலாளர்களும் பயமுறுத்துகிறார்கள்எங்கள் சங்கம் சி ஐ டி யு சந்தாவே கையில் நேரடியாக தொழிலாளர்கள் வாங்கிக்கொண்டு நிர்வாக நலனையும், தொழிலாளர் நலனையும், பாதுகாக்க மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார்.
-P. பரமசிவம்.