கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உலா வந்த ஒற்றை யானை மக்கள் அதிர்ச்சி… நேற்றைய தினம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஒற்றை யான அட்டகாசம் செய்து வந்தது. இந்த நிகழ்வு ரொட்டிக்கடை, பாறை மேடு, பரலை, பகுதியில் கடைகளை உடைத்து சேதப்படுத்தியது அவ்வப்போது இதுபோன்ற யானை மற்றும் சிறுத்தை அட்டகாசம் நிகழ்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைவதோடு, தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு இரவு நேரங்களில் ரோந்து வர வேண்டும் என்றும் பொதுமக்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அங்கு வசிக்கும்
மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக வால்பாறை,
-திவ்யகுமார்.