தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் நகர முக்குலத்தோர் சங்கம் இளைஞர் அணி மற்றும் ராமனூத் ஊராட்சி கசாங்குண்டு முதலிப்பட்டி இளம்போனம் தலக்காட்டுபுரம் சுற்றுவட்டார முக்குலத்தோர் இணைந்து நடத்தும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது குருபூஜை விழாவை முன்னிட்டு எட்டையாபுரம் விளாத்திகுளம் சாலையில் மாட்டு வண்டி எழவைப் பந்தயம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த போட்டியில் பெரிய மாடு மற்றும் சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது பெரிய மாட்டு வண்டி போட்டிக்கு போக வர எட்டு மயில் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இந்த போட்டியில் மொத்தம் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் சண்மாபுரம் மெடிக்கல் விஜயகுமார் மாடுகள் முதலிடம் பிடித்து ஒரு லட்சத்து 117 பரிசாக பெற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் என். கண்ணன் வேளாண் குளம் மாட்டு வண்டி இரண்டாவது இடம் பிடித்து 75. 117 ரூபாய் பரிசாக பெற்றது. மூன்றாவது இடம் பிடித்த கே வேப்பங்குளம் நல்லம்மாள் நினைவாக நல்ல தேவர் அதிகரை வேங்கை சேர்வை மலைச்சாமி கோனார் நினைவாக ஐலங்குடி வண்டிக்கு 50 ஆயிரத்து 117 ரூபாயும், நான்காவது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் மோகன் சாமி குமார் ஆர் எஸ் சுரேஷ்குமார் ஐயங்கார் பேக்கரி துரைசாமிபுரம் மாட்டுவண்டிக்கு 10,117 பரிசாக வழங்கப்பட்டது. ஓட்டி வந்த சாரதிக்கு பரிசுகள் வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டியை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.