தூத்துக்குடி மாவட்டம் விளாத்தில் அருகே உள்ள கத்தாழம்பெட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பைரவர் ஸ்ரீ காலடி கருப்பசாமி திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் முறையாக மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றது இந்த மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தனர் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கே பந்தயத்திற்கு 5 மயில் தூரமும் தேன்சிட்டு மாட்டு வண்டிகள் பந்தயத்திற்கு 3 மயில் தூரமும் போட்டி எல்லை நிர்ணயிக்கப்பட்டு நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிக்கு விழா கமிட்டினர் சார்பாக பரிசு தொகை குத்துவிளக்கு சுழல் கோப்பை ஆகியவை பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகி கத்தாலம்பட்டி வேல்முருகன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் இளம் பிறை ராஜகண்ணு. இமானுவேல் திமுக இளைஞர் அணி
பசும்பொன் பழனிச்சாமி திமுக கமலாபுரம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் குட்டி என்ற வையணன் மற்றும்விழா கமிட்டி கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போட்டியை காண சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.