கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள கேஜமுடி எல் டி டிவிஷன் குழிப்பிரட்டு பகுதியில் உள்ள வீட்டின் அருகாமையில் பாத்திரங்கள் உடைப்பது போன்ற சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்க்கும் பொழுது, சரோஜா வயது – 42 ,சந்திரன் வயது – 62, முருகன் என்பவரின் மகன் உதயகுமார் வயது – 32, கார்த்தீஸ்வரி வயது – 40 கணவர் பெயர் திருநாவுக்கரசு இவர்கள் மற்றும் யானை விரட்டியதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் சரோஜமா அவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மூவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை கண்ட உடனே வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டு, மக்களை வீட்டிற்கு வெளியே வராமல் தடுத்தனர்.
பின்பு யானையை விரட்டி காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாளை வரலாற்றை செய்திக்காக,
-திவ்யகுமார், வால்பாறை.
One Response
இரவு நேரங்களில் பாதுகாப்பாக வெளியே வரவும்