கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் என்பது கேள்விக்குறியாக உள்ளது ஆங்காங்கே தரமற்ற சாலைகள் சுகாதாரமற்ற படகு இல்லம் செயல்படாத தாவரவியல் பூங்கா ஆண்கள் இலவசமாக சிறுநீர் கழிப்பதற்கு கண்ணாடி மாளிகை போன்றவை யானை போல் பல கோடி ரூபாய் வீணாகிறது. இந்நிலையில் இதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதுமில்லை காது கொடுத்தும் கேட்பதில்லை காரணம் வர வேண்டியது வருகிறது. வளையல் கடை லைனில் கட்டண கழிப்பிடம் நடத்துவரிடம் உரிய வாடகை கட்டவில்லை நோட்டீஸ் கொடுத்து மூன்று நாட்கள் ஆகிறது பணம் கட்டவில்லை என்றால் பூட்டி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் நகராட்சி அதிகாரிகள்.
வால்பாறை மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்து தனது வசதிக்கேற்ப கட்டி உள் வாடகைக்கும் விலைக்கும் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் அதுவும் தற்பொழுது ஒரு சிலர் தரைவாடகை மட்டும் நகராட்சிக்கு கட்டுகிறார்கள் அவர்களிடம் எல்லாம் இவர்கள் போய் எதுவுமே கேட்கவும் முடியாது பேசவும் முடியாது ஏனென்றால் இவர்களுக்கு தேவையானது அனைத்தும் அங்கே கொடுத்து விடுகிறார்கள் இவர்கள் யானை போல் மக்கள் வரிப்பணம் வீணாவதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் சாதாரண வாடகைக்கு எடுத்து மாதாமாதம் வாடகை கட்டியும் தனது குடும்ப சூழ்நிலையும் பொருளாதார சூழ்நிலையினால் தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் கட்ட முடியவில்லை என்பதை உணராமல் அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்,
.
விளம்பரம்
நகராட்சியில் வாடகைக்கு கடை எடுத்து நடத்தும் வியாபாரிகள் கூறுகையில் எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுப்பதில்லை நாங்கள் மாத மாதம் வாடகை கட்டுகிறோம் யானை போல் மக்கள் பணம் வீணாகிறது அதை கண்டுகொள்ள மாட்டார்கள் எலி போல் உள்ள குறைந்த தொகை உள்ள எங்களை மிரட்டுகிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் இருக்கிறோம் என்று கதறுகிறார்கள். இது தொடர்பாக நாமும் களத்தில் இறங்கி ஆய்வு செய்தோம் வெளியே சொன்னால் வெட்கக்கேடு சொல்லாமல் இருந்தால் பத்திரிக்கை துறைக்கே அவமானம் உண்மையாலும் நகராட்சியில் வாடகைக்கு கடை எடுத்து நடத்தும் வியாபாரிகளின் கதறல் 100% உண்மை
அதேபோல் நடவடிக்கை என்று வரும் பட்சத்தில் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.
–P. பரமசிவம்.
One Response
அனைத்து பகுதிகளிலும் இருப்பவன் ராஜா இல்லாதவன் கூஜா என்பதுபோல் இதுவும் ஒரு செய்தி யாரும் திருந்த மாட்டார்கள் அனைவரும் ஒன்று பட்டால் தான் நன்மை உண்டாகும். நன்றி