விளாத்திகுளம் பகுதியில் வெள்ளத்தால் சுமார் 6ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமாகியுள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளாத்திகுளம் தாலுகாவிற்குட்பட்ட காடல்குடி, சுந்தரபச்சையாபுரம், இராமச்சந்திரபுரம், சுப்பையாபுரம், லட்சுமிபுரம், முத்தையாபுரம், மல்லீஸ்வரபுரம், மிட்டாவடமலாபுரம் உட்பட ஏராளமான பகுதிகளில் சுமார் 6000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பயிரிட்டிருந்த மிளகாய், வெங்காயம், மல்லி, உளுந்து, மக்காச்சோளம் என பெரும்பாலான விவசாய பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், விளை நிலங்களிலேயே நீரில் மூழ்கியும் காணப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த அனைத்து பயிர்களும் மழையால் பாதிப்படைந்த நிலையில் தற்போது வரை அதற்கான இது இழப்பீடு தொகையும், பயிர் காப்பீடு தொகையும் வழங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டும் கனமழை காரணமாக தங்கள் பெயரிட்டு இருந்த விவசாய பயிர்கள் அனைத்தும் நாசமாகி உள்ளது என்று அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ7u3e4r3e
மேலும், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை கூட தங்களுக்கு வழங்கப்படாத காரணத்தால் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து இந்தாண்டு விவசாயம் செய்தும் தங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது என்றும், தாங்கள் மருந்தை குடித்துதான் சாகவேண்டும் என்று உணர்ச்சி பொங்க தங்களது மன வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.
எனவே, விளாத்திகுளம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விலை நிலங்களை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க உடனடியாக இழப்பீட்டுத் தொகை மற்றும் பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையா
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.