விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருந்த குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் கிராமம் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்வே எண் 228/2ஏ ஆதிதிராவிடர் நலத்துறையால் 79 நபர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு கணினியில் ஏற்றி இ பட்டா வழங்க வலியுறுத்தி டிசம்பர் 19 ஆம் தேதி அன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்படி புல எண்ணில் வழங்கப்பட்ட பட்டாக்களை ஆய்வு செய்து நில அளவீடு செய்தும் தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு பிரேரணை அறிக்கை அனுப்பப்பட்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் இ பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற இருந்த குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கே.பி. ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் ஜோதி, தாலுகா குழு உறுப்பினர்கள் பாலமுருகன், கனகராஜ், புதூர் நகர செயலாளர் அய்யனார் செந்தில் வெல் , ஆண்டி விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.