கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அமைந்துள்ள கே டி ஹஜ் பி தேயிலை நிறுவனத்திற்கு சொந்தமான மாட்டுப்பட்டி எஸ்டேட் அருகே உள்ள குட்டியார் டிவிசனில் வசித்து வரும் அஸ்வின் என்ற இளைஞர் அவர் வீட்டின் அருகே வசித்து வரும் 17வயது சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறுமியின் வயிற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனே பயந்து போன சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததால் மனமுடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமி கர்ப்பம் ஆனது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக மூணாறு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் அஸ்வின் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்பொழுது மூணார் பகுதிகளில் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவது வருத்தத்துக்குரியதாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.