கந்தர்வகோட்டை ஜன 21.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா கூறும் பொழுது வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் இந்த ஆறு கோள்களையும் இரவு வானில் மிக தெளிவாக ஜனவரி 21 முதல் நாம் பார்க்க முடியும். ஜனவரி 21 2025 முதல் இந்த கோள்கள் ஒருங்கிணைவு நடைபெறுகிறது. அன்றிலிருந்து நான்கு வாரங்கள் அதாவது பிப்ரவரி 21 வரை இந்த கோள்களின் ஒருங்கிணைவை நாம் பார்க்க முடியும். இந்த கோள்கள் ஒருங்கிணைவு நடைபெறுவதற்கு காரணம் ஒவ்வொரு கோளும் அதனுடைய நீள் வட்ட பாதையில் வெவ்வேறு விதமான வேகத்தில் சுற்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இந்த ஒருங்கிணைவு நடக்கிறது. இதனை வெறும் கண்ணாலும், தொலைநோக்கி மற்றும் பைனாகுளர்களாலும் பார்த்து மகிழலாம்.
புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதால் இப்போது காண்பது கடினம். மற்ற கோள்களான வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை இரவு வானில் நேர்கோட்டு ஒருங்கிணைப்பில் காண முடியும் . இந்த ஒருங்கிணைப்பு காரணமாக பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை .
இந்தக் கோள்களில் வெள்ளி செவ்வாய் வியாழன் சனி ஆகியவை வெறும் கண்ணாலே பார்க்க முடியும். யுரேனஸ், நெப்டியூனை தொலைநோக்கில் மட்டுமே பார்க்க முடியும். இந்த கோள்களின் மேக்கனைட் அளவு வெள்ளிக் கோளின் -4.9, சனிக்கோளின் 1.13, வியாழன் கோள் -2.47, செவ்வாய் – 1.34 இவற்றின் அளவு எல்லாம் ஐந்துக்கு கீழாக இருப்பதால் வெறும் கண்ணால் பார்க்க முடியும். யுரேனஸ் +5.68 நெப்டியூன் +7.92 இவை இரண்டும் ஐந்து விட அதிகமாக இருப்பதால் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. இவ்விரு கோள்களையும் தொலைநோக்கி வழியாக தான் பார்க்க இயலும். நாம் இரவு வானில் சூரியன் மறைந்த பின்பு மேற்கு திசையில் தோராயமாக 6:30 மணி முதல் 7:00 மணிக்குள் முதலில் வெள்ளி கோள் மிகவும் பிரகாசமாக தெரியும். இந்த வானியல் நிகழ்வில் மிகத் தெளிவாக காணப்படும் கோள். வெள்ளி அருகே சற்று மங்களாக சனிக்கோளையும் பார்க்க இயலும். அதன் பிறகு யுரேனஸ், நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி வழியாக பார்க்கலாம். சரியாக நமது தலைக்கு உச்சியில் வியாழன் கோளினையும் பார்க்கலாம். அதன் பிறகு கிழக்கு திசையில் செவ்வாய் கோளையும் பார்க்க முடியும். செவ்வாய்க்கோள் சற்று செந்நிற கோளாக காட்சியளிக்கும். அதற்கு காரணம் அதில் இருக்கக்கூடிய இரும்பு ஆக்சைடு தான். இந்த கோள்களை நாம் வெறுங்கண்ணால் பார்த்து மகிழலாம்.
இந்த அரிய காட்சியை ஜனவரி 21 முதல் பிப்ரவரி 21 வரை ஒரு மாதம் முழுவதும் நான்கு வாரங்களுக்கு எல்லா நாளுமே காண முடியும். வாய்ப்பு உள்ளவர்கள் தொலைநோக்கி பயன்படுத்தி மிகவும் தெளிவாகவும் இதை கண்டு மகிழுங்கள் இந்த அறிய நிகழ்வு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு 2040 ஆம் ஆண்டு தான் மீண்டும் நடைபெறும் அப்பொழுதும் இதை மீண்டும் நாம் பார்க்க முடியும்.
இந்த ஆறு கோள்களும் வானில் ஒரு டிகிரி சுற்றுவட்ட பாதையில் வருவதால் இதை நாம் நேரடியாக பார்க்க வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. இந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம்தேதி நிலவுக்கு மிக அருகில் வெள்ளி கோளானது தெரிந்தது. அதன் பிறகு ஜனவரி 13ஆம் தேதி பௌர்ணமி அன்று நிலவுக்கு அருகில் செவ்வாய் கோள் இருந்தது. இந்த நிலையில் வெள்ளியும் சனிக்கோளும் இதுவரை இல்லாத அளவு மிகவும் நெருக்கமாக ஜனவரி 18 அன்று இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் இதை நாம் சரியாக காண்பதற்கு இரவு 7 மணிக்கு மேல் பார்க்க முடியும்.
இரவு 9 மணி 10 மணி வரை சரியாக பார்க்கலாம். இதை பார்ப்பதற்கு வானம் மேகமூட்டம் இல்லாமல் இருக்க வேண்டும். வானம் தெளிவாக இருந்தால் இந்த அற்புத காட்சியை தெளிவாக காணலாம். ஒரு மாத காலம் இருக்கிறது. அனைவரும் பார்த்து மகிழுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று பேசினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ஈசா.