கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் அதிகம் உள்ளன. இதனை ஒட்டி அமைந்துள்ள கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகள், கூட்டமாகவும், ஒற்றையாகவும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தடுக்க வனத் துறை சார்பில் குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் படுகிறது.
யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியும் வருகின்றனர்.
இவ்வாறு உணவு தேடி ஊருக்குள் வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது. மேலும் மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி உள்ளது. மேலும் விவசாயிகள், பொதுமக்கள் யானைகள் ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குள்ளும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். யானை தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மேலுமணி என்பவர் தோட்டத்தை கேட்டை பூட்ட சென்ற போது ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தொடர்ந்து அதிகாலை நேரத்தில் நாயக்கன் பாளையம் பகுதியில் மற்றொரு ஒற்றைக் காட்டு யானை உலா வந்துள்ளது. இந்த யானை தனசேகரன் என்பவர் தோட்டத்து வீட்டில் புகுந்து அரிசி, பருப்பு மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த புண்ணாக்கு ஆகியவற்றை தின்று சூறையாடி சென்றது.
விவசாயி தனசேகரன், மனைவி, மகன் உயிர் பயத்துடன் வீட்டில் ஒளிந்து கொண்டனர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிக்குள் வனப் பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக வேலி அமைத்து நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருந்தார். இந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.