கோயம்புத்தூர், போத்தனூர் செட்டிபாளையம், சங்கமம் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி சங்கம நகரில் தோராயமாக 400 குடியிருப்புகள் உள்ளன சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் ஜாதி மத பேதம் இன்றி ஒற்றுமையோடும், சமுதாய நல்லிணக்கத்தோடும், சகோதரத்துவத்தோடும், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை “சமத்துவ பொங்கலாக” சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. இதில் சமத்துவ பொங்கல் மூன்று மதமும் இணைந்து ஒன்றுபட பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சிறுவர், சிறுமியர், ஆடவர், மகளிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் இனிப்பு
பொங்கல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சங்கமம் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் முருகானந்தம், செயலாளர் அப்துல் ரஹீம், துணைத் தலைவர் சையது இப்ராஹிம், நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், பெஞ்சமின், ரியாஸ், ஆண்டனி, அப்துல் சமது, சந்தோஷ், கிதர் முகமது, விஜயகுமார், வினோத் குமார், யாசிர், பிரவீன், மற்றும் முன்னாள் தலைவர் திரு பாண்டியன் அவர்கள், திரு சிதம்பரம் அவர்கள், திரு அப்புகுட்டன் அவர்கள், திரு விஸ்வநாதன் அவர்கள், மற்றும் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.