கந்தர்வகோட்டை பிப் 05.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீகச் செல்வி எளிய அறிவியல் பரிசோதனைகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா காலநிலை மாற்றம் என்ற தலைப்பில் பேசும்பொழுது காலநிலை மாற்றம் இன்று ஒரு பெரிய உலகளாவிய சவாலாக உள்ளது, மேலும் உலகம் இந்த மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக மாறி வருகிறது. காலநிலை மாற்றம் என்பது பூமியின் காலநிலை நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பூமியின் காலநிலை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த மாற்றங்களில் சில எரிமலை வெடிப்புகள், வெள்ளம், காட்டுத் தீ போன்ற இயற்கை காரணங்களால் ஏற்பட்டன, ஆனால் அவற்றில் சில மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டவை. காடழிப்பு, புதைபடிவ எரிபொருட்களை எரித்தல் போன்ற மனித நடவடிக்கைகள் அதிக அளவு பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகின்றன. இதன் விளைவாக பசுமை இல்ல விளைவு மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாகும்.
புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமான புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். சுத்தமான ஆற்றலுக்கு படிப்படியாக மாறுவதற்கு நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மாசுபாட்டைத் தவிர்க்க வேண்டும் எனவும் ,அனைவரும் மரக்கன்று நடுவதை விழிப்புணர்வு பிரச்சாரமாக செய்ய வேண்டும் சென்று பேசினார். நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.