கந்தர்வகோட்டை அருகே டார்வின் பிறந்த தின கருத்தரங்கம்!!

கந்தர்வகோட்டை பிப் 12. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் சார்லஸ் டார்வின் பிறந்த தின கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா சார்லஸ் டார்வின் பிறந்த தினம் குறித்து பேசும் பொழுது சார்லஸ் ராபர்ட் டார்வின் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பிப்ரவரி 12, 1809 அன்று ஷ்ரூஸ்பரியில் பிறந்தார். ஒரு ஆங்கில புவியியலாளர், இயற்கை ஆர்வலர் மற்றும் உயிரியலாளர் ஆவார். அவர் இயற்கை தேர்வின் மூலம் உயிரியல் பரிணாமக் கோட்பாட்டின் மீதான தனது பணிக்காக நன்கு அறியப்பட்டவர். தகவமைப்பு கதிர்வீச்சைக் கவனித்த முதல் நபர் இவர்தான், மனிதகுலம் எவ்வாறு உருவானது என்பதைக் கண்டுபிடித்தார் மற்றும் டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாடு என்று அழைக்கப்படும் பரிணாமக் கோட்பாட்டையும் விளக்கினார், மேலும் உயிரினங்களின் தோற்றம் இயற்கைத் தேர்வின் மூலம் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.
பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை அளித்த சார்லஸ் டார்வின் ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த 20 ஆண்டுகள் ஆயின. தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டு 22-வது வயதில் நீண்ட பயணம் மேற்கொண்டார்.

எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் டார்வின் தென் அமெரிக்கா சென்றார். மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கேதான் அவர் சேகரித்தார்.
கலபகோஸ் என்ற வார்த்தையுடன் நமக்கு முதலில் தொடர்பு ஏற்பட்டிருப்பது டார்வின் என்ற பெயராக இருக்கலாம். டார்வினின் கலபகோஸ் தீவுகளுக்கான வருகை அவரது இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டின் உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சார்லஸ் டார்வின் முன்மொழிந்த பரிணாம வளர்ச்சி கோட்பாடு, உயிரினங்களின் தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றிய அறிவியல் கோட்பாடு. இயற்கைத் தேர்வு கோட்பாடு என்றும் அழைக்கப்படும் இந்தக் கோட்பாடு, நவீன பரிணாம ஆய்வுகளின் அடித்தளமாக உள்ளது.

டார்வின் கோட்பாட்டின் அடிப்படை கொள்கைகளான அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து கிளைத்தவை. மனிதன், யானை, சிங்கம், மீன்கள், முதலைகள் என அனைத்துமே பொதுவான ஓர் உயிரில் இருந்து பரிணாம வளர்ச்சியின் விளைவாக வந்தவை.
பரிணாமம் பெரும்பாலும் இயற்கைத் தேர்வின் அடிப்படையில் நிகழ்கிறது. சிறிய மரபணு மாற்றங்கள் காலப்போக்கில் குவிந்து ஒரு புதிய இனங்கள் உருவாக வழிவகுக்கும்.

டார்வின் பரிணாம உயிரியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளை செய்தார். அவை இப்போது பரிணாமக் கோட்பாடு என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோட்பாட்டின் மூலம், பூமியில் உள்ள இனங்கள் நிலையானவை அல்ல, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் மூலம், அவை வளர்ச்சியடைந்து மற்ற உயிரினங்களாக மாறலாம் என்று பேசினார்.

மாணவர்கள் சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாறு குறித்து தெரிந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts