கந்தர்வக்கோட்டை பிப் 17
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு (என்.எம்.எம்.எஸ்) மாதிரித் தேர்வு நடைபெற்றது. தேர்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். கணித பட்டதாரி ஆசிரியர் தேர்வு மைய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். தேர்வினை அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி மன திறன் தேர்வு இதில் 90 மதிப்பெண் நாட்கள் இடம்பெற்றிருக்கும் இத்தேர்வில் அடிப்படை கணித அறிவினை சோதிக்கக் கூடியதாக வினாக்கள் கேட்கப்படும். எண்கள், எழுத்துக்கள் வேறுபாடு, ஒற்றைப்படை எண் இரட்டைப் படை எண், புதிர்கள்,விடுப்பட்ட எண்களை எழுதுக உள்ளிட்ட பகுதிகளில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இரண்டாவது பகுதியாக படிப்பறிவு திறன் தேர்வு 90 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். இதில் ஏழாம் வகுப்பு அறிவியல் பாடப் பகுதிகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூக அறிவியல் முழு பாடமும் எட்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேட்கப்படும் இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 வகுப்பு முதல் 12 வரை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வருகிற 22 ஆம் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி தொகை தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக மாணவர்களை தயார் படுத்தும் விதமாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு எழுதிய மாணவர்கள் மாதிரி தேர்வு எழுதும் போது எங்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள சந்தேகங்கள், பாடப் பகுதியில் உள்ள சந்தேகங்கள் அனைத்தும் தீர்வு காண்பதற்கு உதவியாக இருந்தது என்று கூறினார்கள்.தேர்விற்கான ஏற்பாடுகளை சந்தியா, வெள்ளைச்சாமி,ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் செய்திருந்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.