கோவையில் மாணவர்கள் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை!!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர்கள் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு வகையான விழுப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். போதை பழக்கங்களினால் இளம் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலையும் உருவாககும். போதைப் பொருட்களினால் அவர்களின் வாழ்க்கை பாதை சீரழித்து விடும் நிலைக்கு சென்று விடுகின்றன. கல்லூரிகளில் காவல் துறை சார்பில் போதை தடுப்பு விழுப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அவ்வப்போது கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர்கள் விடுதிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகப் வந்த தகவலின் அடிப்படையில், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர்கள் தங்கி இருந்த 15 விடுதிகளில் மேற்கொள்ளப் பட்டது. அனைத்து அறைகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஆனால் சோதனையின் போது போதைப் பொருள் ஏதும் கண்டுபிடிக்கப்பட வில்லை என தெரிகிறது.
இந்த சோதனையைப் பற்றி காவலர்கள் தெரிவிக்கையில் சரவணம்பட்டி பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய சோதனைகள் எதிர் காலத்திலும் தொடரும் என தெரிவித்தனர்.

மாணவர்கள், போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து விலகி, கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.

கோவையில் குனியமுத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக முன்பு கல்லூரி மாணவர்கள் வீட்டு மாடியில் கஞ்சா செடிகள் வளர்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் 22 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். 5 மாணவர்களை கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts