கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டு மற்றும் 20 வார்டு நகர மன்ற உறுப்பினர் திமுக வும் அதிமுகவும் கைப்பற்றியது. இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளுக்கு தெருவிளக்கு,சாலை மற்றும் அடிப்படை வசதிகள் பெயரளவுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. பல வேலைகள் செய்யாமலே செய்த மாதிரி பொய் கணக்குகளை காண்பித்து கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றுகிறார்கள் இதற்கும் நகராட்சி அலுவலர்களும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் பொதுமக்களுக்கு திராவிடம் மாடல் அரசு மீது அவப்பெயர் ஏற்படுகிறது என்று வால்பாறை அக்கா மலை பேருந்து நிலையத்தில் திமுக கவுன்சிலர் ரவிச்சந்திரன், மகடீஸ்வரன், வீரமணி ஆகியோரும் ஒரு அதிமுக கவுன்சிலர் மணிகண்ட பிரபு ஆயோரின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கவுன்சிலர் திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்று திமுக நகர மன்ற தலைவரே கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது பேசியது மிகவும் முக்கியமாக இருந்தது இது தொடர்பாக மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கூறுகையில் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துதான் தனியார் நிறுவனம் தெரு விளக்கை பராமரிப்பது சரி செய்ய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
நல்ல காத்து, முடிஸ், வாழைத்தோட்டம் சாலை போன்ற சாலைகள் போடப்பட்டு இன்னும் ஆறு மாதங்கள் ஆகவில்லை சாலையிலும் குண்டும் குழியுமாக உள்ளது இந்த நகர மண்ட உறுப்பினர்கள் சாலையில் தரம் இல்லை சாலை சரியில்லை ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த தொகை கொடுக்க வேண்டாம் என்று நகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதத்தை கொடுத்து ஒப்பந்த தொகை நிறுத்தி வைத்திருக்கலாம்.
சாலையை சரி செய்த பிறகு ஒப்பந்த தொகையை வழங்கலாம் இப்பொழுது எல்லாம் ஒருவர் ஒப்பந்தம் எடுப்பது என்றால் மாவட்ட அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஒன்றிய செயலாளர் நகர மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர் அது மட்டுமில்லாமல் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் இவர்கள் மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய நகர மன்ற உறுப்பினராக இருந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிப்படையாக மக்களுக்கு செய்து கொடுக்கலாம். திமுக பொறுப்பு அமைச்சர் மாவட்டச் செயலாளர் நகரச் செயலாளர் இருந்தும் திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது திமுக தொண்டர்கள் மன வேதனை அடைந்தனர் நகர மன்ற தலைவரே தேர்வு செய்ததும் இவர்களே தனி நபரிடம் தெரு விளக்குகளை பராமரிப்பதற்கும் ஒப்பந்தங்கள் போடப்பட்டது இவர்களே அப்பொழுது மக்கள் நலனை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனத்திடம் தெருவிளக்கு பராமரிப்பது அமல்படுத்தாமல் இருந்திருக்கலாம் அப்பொழுதெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.
இதே கதை தான் கடந்த அ தி மு க ஆட்சியிலும் நகராட்சியில் பல கோடி ரூபாய் ஏப்பம் விடப்பட்டது அதை தான் இப்பொழுது உள்ள திமுகவும் செய்கிறது ஆனால் நகராட்சி அதிகாரிகள் அப்பாவி கைத்தொழில் செய்து மார்க்கெட் கடையில் வாடகைக்கு எடுத்து நடத்தும் அப்பாவி மக்களை வாடகை கட்ட சொல்வதும் துன்புறுத்துவதும் கடையை சீல் வைப்பதும் வாடிக்கையாக உள்ளது வேலைகள் செய்யாமலே செய்ததாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளே கண்டுகொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள் ஆனால் அடித்தட்டு அப்பாவி மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கைத்தொழில் செய்ய நகராட்சி கடைகளை வாடகைக்கு எடுத்து ஒரு சில நேரங்களில் வாடகை கட்ட முடியாத சூழ்நிலை இருந்தாலும் கடைகளே பூட்டுவதும் வாடகைகளை கட்டச் சொல்லி துன்புறுத்துவதும் வேடிக்கையாக உள்ளது. அதே சமயம் வெளியூரிலிருந்து வரும் வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூல் செய்கிறார்கள் இது எல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை திமுக கட்சியின் உண்மையான தொண்டர்களின் நிலைமையோ பரிதாபமாக உள்ளது. கூட்டணி கட்சிகளையும் மதிப்பதில்லை, எளிதாக கோடி கோடியாக பணம் சேர்ப்பதாகும், இனியாவது தமிழக. முதல்வர் தனி கவனம் செலுத்தி வால்பாறை நகராட்சி வளர்ச்சிப் பணிகளை மக்களுக்காக செய்து கொடுத்து கோடி கோடியாக கொள்ளை போகும் மக்கள் வரி பணம் பாது காப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-P. பரமசிவம்.