கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் முப்பெரும் விழா 2025 பிப்ரவரி 20-ம் தேதி நடைபெற்றது.
(முன்னாள் மாணவரும் பீரபல வழக்கறிஞருமான முத்துசாமி மேடையில் பேசினார்)
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(முன்னாள் மாணவரும் பீரபல வழக்கறிஞருமான முத்துசாமி மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.)
இலக்கிய மன்ற நிறைவு விழா. விளையாட்டு விழா மற்றும் பள்ளி பரவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா என முப்பெரும் விழா மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் பத்திரிக்கையாளரும் பள்ளி முன்னாள் மாணவருமான ஆர்.கே விக்கிரம பூபதியின் கல்லூரி கால ஆருயிர்த்தோழமையும் தன்னம்பிக்கை பேச்சாளருமான இலட்சியத் தென்றல் லட்சுமி காந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை உரையை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலா வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுக்கரை நகர்மன்ற தலைவர் நூர்ஜகான் நாசர், சென்னை மூத்த வழக்கறிஞர் சி. முத்துசாமி ஆகியோர் பங்கேற்று அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.
பள்ளி மேலாண்மைக்குழு. நிர்வாகியும் கல்வியாளருமான சாலம் பாஷா அரசு பள்ளி மாணவர்கள் திறன் குறித்து பேசினார்.
விழாவில் பள்ளிக்கு பல்வேறு வகையில் உதவி தரமாக திகழும் பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய புரவலர்கள் வழக்கறிஞர் முத்துசாமி , கேபிள் பாலு .குமாரவேலு. சாலம் பாஷா. கமலம். கிருஷ்ணசாமி. விஷ்ணுகுமார் .சுகந்த் .பாரதி. கணேஷ். நாகேந்திர குமார். கார்த்திகேயன் .சண்முகசுந்தரம். கனகாசலம் ஆகிய 14 பேருக்கு பாராட்டி சான்றிதழ் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
(முன்னாள் மாணவர், மூத்த வழக்கறிஞர் முத்துசாமி)
(தன்னம்பிக்கை பேச்சாளர் இலட்சியத்தென்றல் – லட்சுமி காந்தன்.)
நிறைவில் பள்ளி பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் விஜயபாமா நன்றி கூறினார். விழாவில் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்
இதையடுத்து விழாவை சிறப்புற நடத்திய பள்ளி தலைமையாசிரியர் ஷஹிலா, பட்டதாரி உதவி தலைமையாசிரியர் விஜய பாமா உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர்,,பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ் தலைமையில் குழுவினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழுலினருக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 1,000 பேர் அடங்கிய மலரும் நினைவுகள் குழு நிர்வாகிகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி , துணை ஒருங்கிணைப்பாளர் அன்னம்மா ஜெஸி, அமிர்தலிங்கம், , போட்டோகிராபர் ஜான், எஸ்.வி.கணேசன், சி.ஜெகநாதன் L.L.M, ரங்கநாதன் (எ) ஆனந்த், ஹேமலதா, பிச்சனூர் சாந்தி, ஐஸ்வர்யா, என்.பாலசுப்ரமணியன், ஆனந்த், சிங்கர் கோபி சுப்பிரமணியன், வெ..ரமேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
(மலரும் நினைவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளர், கவிஞர் ஆர்.கே.விக்கிரம பூபதி)
இந்நிலையில் மலரும் நினைவுகள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” வணக்கம்…. தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் ஆகியோருக்கு…நமது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன். இது நமது பள்ளி விழா. சிறப்பு விருந்தினர் இலட்சிய தென்றல் லட்சுமி காந்தன் எனது கல்லூரி தோழர் தான். மிக நன்றாக மேடையில் பேசுவார். அவர் சீறப்பு விருந்தினராக பங்கேற்கும் நமது பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க என்னால் முடியாதது கூடுதல் வருத்தமே.
(1990- களில் அன்றைய பட்டிமன்ற இளம் பேச்சாளரும் இன்றைய கல்வியாளருமான கவிதா.)
எனது உடல் நலம் கருதி இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பு இல்லாத சூழல். எனது பள்ளி ஆண்டு விழாவில் தவிர்க்க முடியாத சூழலால் மட்டுமே பங்கேற்க இயலவில்லை.
தலைமையாசிரியரும் உதவி தலைமையாசிரியரும் மற்றும் ஆசிரியர்களும் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். நீங்களும் தலைமையாசிரியரும் பள்ளிக்காக விடுத்த பொருளாதார கோரிக்கை எனக்கு நினைவில் இருக்கிறது. நிச்சயமாக பெற்றுதர முயற்சிப்பேன். சிரமத்திற்கு மன்னிக்க வேண்டும். மீண்டும் வாழ்த்துகள், நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளி ஆண்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம்: நமது மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி விழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.
(முப்பெரும் விழாவை வாழ்த்திய மலரும் நினைவுகள் குழுவினர்.)
தவிர்க்க முடியாத சூழலில் இன்று விழாவில் பங்கேற்க இயலவில்லை. எனது கல்லூரி கால தோழன் இலட்சியத் தென்றல் லட்சுமி காந்தன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு தூள் கிளப்ப உள்ளார். பெயரைப் போல அவரது பேச்சில் காந்தமும் ஈர்ப்பும் இருக்கும். மாணவச்செல்வங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். முயற்சி எடுத்த தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் உள்ளிட்ட குழுவுக்கு நன்றிகள், பாராட்டுகள். மீண்டும் வாழ்த்துகிறோம்.
மலரும் நினைவுகள் குழு சார்பிலும் வாழ்த்துகள் கோடி எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி குறிப்பிட்டுள்ளார். மதுக்கரை அரசு பள்ளிக்கு ரூ.5.லட்சம் வழங்கிய “எட்டாவது வள்ளல்” வழக்கறிஞர் முத்துசாமி: மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மூத்த மாணவரும் பிரபல வழக்கறிஞருமான சி.முத்துசாமி பள்ளி முப்பெரும் விழாவில் வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சம் வழங்கியது சேவை மனதையே காட்டுகிறது.
எட்டாவது வள்ளல் என அவரை நான் அழைக்கிறேன். மதுரையில் மூதாட்டி ஆயி பூரணி அம்மாள் பள்ளிக்கு ஏழரை கோடி மதிப்பு நிலத்தை தானமாக அளித்து தர்ம தேவதை ஆனார். மூத்த வழக்கறிஞர் முத்துசாமி கடையேழு வள்ளல்களை மிஞ்சி விட்டார்.
அவருக்கு மலரும் நினைவுகள் குழு தலைவணங்குகிறது…வாழ்த்தி மகிழ்கிறது” எனவும் பத்திரிக்கையாளர் ஆர்.கே. விக்கிரம பூபதி மற்றும் (மலரும் நினைவுகள் குழு, தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் நெஞ்சம் நெகிழ வாழ்த்தியுள்ளனர்.
-நாளைய வரலாறு செய்திகளுக்காக…
– ஆர்.கே.விக்கிரம பூபதி.