கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மலைத்தொடரில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு. சமதளப் பகுதிகளில் வாகனத்தை ஓட்டுவதுபோல், மலைப்பாதையிலும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இது குறித்து இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்
மா.வெற்றிவேல் கூறுகையில்;
சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வு இல்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் குரங்குகள் அதிகப்படியாக செத்துமடிகிறது. வனத்துறை அதிகாரிகளும் வனவிலங்கு ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தினாலும் யாரும் கேட்பதாகயில்லை. இயற்கையை பார்த்து ரசிப்பது தவறில்லை. ஆனால், இதுபோன்ற செயல்களால் வனவிலங்குகள் செத்துமடிவத்தை ஏற்கமுடியாது.
வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை எச்சரிக்கை விடுக்கிறது. இனியும் வனவிலங்குகள் சாலையில் வாகன ஓட்டிகளால் இறக்க நேரிட்டால் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை நாட நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனைமலை புலிகள் காப்பக மலைப்பாதையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் செல்ல தடைவிதிக்க நீதிமன்றத்தை நாடவும், மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கும் நிலைக்கு எங்களை உட்படுத்தாதீர்கள் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
வனம்-வனவிலங்கு பாதுகாப்பு கருத்தில் கொண்டுதான் ஆனைமலை புலிகள் காப்பகம் மலைத்தொடர் முழுக்க சுற்றுசூழல் மண்டலம் வரவேண்டும் என்று கருதுகிறோம். மத்திய மாநில அரசுகள் விரைவில் அமல்படுத்த வேண்டுகிறோம்.
வனத்துறை வனவிலங்குக்கு உணவளிக்காதீர்கள் என்று அறிவுறுத்தினாலும் சுற்றுலா பயணிகள் சிலர் குரங்குகளுக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை கொடுக்கிறார்கள். இதனால், ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் உள்ள திருமூர்த்தி மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் செத்துமடிவதாக இன்றைக்குக்கூட செய்தி வெளியாகி இருக்கிறது. மனது வலிக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கும் வனத்துறை அமைச்சர் அவர்களுக்கும் கோரிக்கை விடுக்கிறோம். வனவிலங்குகள் வாழும் மலைப் பகுதிகளை சுற்றுலா விடுவதை தடை செய்ய வேண்டுகிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.