கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பிரதோஷம் பகுதியில் வேலை செய்து வரும் ஜார்க்கண்ட் தொழிலாளி சஞ்சய் என்பவர் நேற்று மாலை 7: 20 மணியளவில் மழுக்க பாறை பகுதி உள்ள கடையிலிருந்து வீட்டுக்கு பொருள்களை வாங்கி சாலை வழியாக நடந்து கொண்டு வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காட்டினுள்ளே இருந்த காட்டு மாடுகள் எதிர்புறமாக இவரை தாக்கியது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து சென்று காட்டு மாடுகளை விரட்டி விட்டு அவரை அருகாமையில் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பின்பு அவரை மேல் சிகிச்சைக்காக 108 வாகனத்தை வரவழைத்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றர்.
அங்கு அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் மாலை நேரங்களில் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களை வனவிலங்கு காப்பகத்தார் எச்சரித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார், செந்தில்குமார்.