கோவை மாவட்டம் வால்பாறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறை, சோலையார் டேம், முட்டீஸ் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சுமார் 7 மருத்துவர்கள் நியமித்ததற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட துணை இயக்குனர் அவர்களுக்கும் கட்சியின் சார்பாகவும் பொதுமக்களின் சார்பாகவும் P. பரமசிவம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக P.பரமசிவம் கூறுகையில்
தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் அடித்தட்டு மக்கள் அனைவரும் இந்த மருத்துவமனையை நம்பியுள்ளனர் அதேசமயம் கடந்த காலங்களில் தமிழகத்தில் அதிக குழந்தைகள் பிரசவ பார்க்கப்பட்ட மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் இருக்கும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கருவுற்ற பெண்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும், எக்ஸ்ரே,ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை இந்த மருத்துவமனையில் செய்ய வேண்டும் இல்லையென்றால் 64 கிலோ கிலோமீட்டர் 40 கொண்டை ஊசி வளைவு கடந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் இதனால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்படுகிறார்கள் இவர்கள் மட்டுமல்ல இவர்கள் குடும்பத்தாரும் மிகவும் சிரமப்படுகின்றன. இவர்கள் நலனை கருத்தில் கொண்டு வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும்.
பரிசோதனைக்கு வரும் கற்பனி பெண்களுக்கு சத்தான, சுவையான, ஆரோக்கியமான உணவும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழக அரசுக்கும் ஆட்சியாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்ற அனைத்து நல்ல உள்ள படைத்த பத்திரிக்கை நிருபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக நாமும் மருத்துவமனையை ஆய்வு செய்தோம் தற்பொழுது 7 மருத்துவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வால்பாறை ஆரம்ப சுகாதாரத்தில் பெண் மருத்துவர் நியமித்தது கர்ப்பிணி பெண்களிடம் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.