எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது குற்றவாளி தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் காயம் அடைந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் தாய் – மகள் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் இடது காலில் சுட்டு பிடித்தனர். இதில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து குற்றவாளி முனீஸ்வரன் மற்றும் முனீஸ்வரன் தாக்குதலில் காயமடைந்த காவல் உதவியாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் காவல் உதவியாளர் முத்துராஜ் மற்றும் காவலர் ஜாய்சனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்துடன் காவலர்களின் துணிச்சலான சம்பவத்திற்கு பாராட்டு தெரிவித்ததுடன் ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் உடன் இருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.