
தூத்துக்குடி மாவட்டம்: 17.09.2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாள் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று (17.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அமைப்பு பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆகியோரால் கீழ்கண்டவாறு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்.” என்று உறுதி மொழி
எடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.





