இனிவரும் காலங்களில் மனிதர்கள் வாழ்வது எப்படி என பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள தாய்முடி இரண்டாம் டிவிஷன் பிரிவு ‘தொழிலாளி மனமகிழ் மன்றத்தின்’ எதிரில் உள்ள தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டங்கள் குடியிருப்புகள் சேதப்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரவு நேரங்களில் காட்டு யானைகள்  உலா வருகின்றது. பகல் நேரங்களில் கரடி, காட்டெருமைக் கூட்டங்கள் இரவு நேரங்களில் யானைகளின் தொந்தரவு என இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் மிகுந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. ஏதேனும் மிருகங்கள் நம்மை தாக்கி வந்து விடுமோ என்று அச்சத்தில் மூழ்கி வருகிறோம் என தேயிலைத் தோட்ட தொழிலாளிகள், பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

வனவிலங்கு அதிகாரிகள் இதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பார்களா என பொது மக்கள் கேள்வி எழுப்பிகிறார்கள். பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்  என்றும் இன்னும் வனவிலங்கு காப்பகத்தார்களை அதிகப் படுத்தினால் விலங்குகளின் தொந்தரவுகளை தவிர்க்க முடியும்  என்றும் தொழிலாளிகள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts