
கந்தர்வகோட்டை ஜீலை 11
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பொருளாக 100% மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் இல்லா பள்ளி, ஆட்டிசம், தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும், மாற்றுத்திறன் ஒருங்கிணைந்த அடையாள அட்டையின் முக்கியத்துவம், முன்னாள் மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி தூதுவரின் விபரங்கள் பதிவேற்றுதல், நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி, பள்ளி மேம்பாட்டு தேவைகள் கண்டறிதல் மற்றும் ஆதரவு திரட்டுதல், மணற்கேணி செயலியை பயன்படுத்துதல் உறுதி செய்தல், மணற்கேணி விழிப்புணர்வு பதாகைகள், எண்ணும் எழுத்தும் குறித்தும், கற்றல் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாட நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முதல் பருவத்தில் மாணவர்கள் அடைவேண்டிய முக்கிய கற்றல் விளைவுகள் குறித்து கலந்துரையாடல், 2024- 2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தல், தீர்மானங்களின் தற்போது நிலை அறிக்கை 2026 மற்றும் 2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளுதல், பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்ட ஊட்ட பொருள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் குறித்து பேசினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் மணிமேகலை நிவின் செல்விஜாய் ஜெம்ம ராகினி சகாய கில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.







