
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் வசதிக்காக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பொள்ளாச்சி நகராட்சி மூலம் கோவை ரோடு சி.டி.சி. மேடு என்ற இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 29.07.2026 முதல் தாராபுரம், பல்லடம், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் நகரப் பேருந்துகள் சி.டி.சி. மேடு பேருந்து நிலையத்திலிருந்து காலை முதலே இயக்கப்படுகின்றன.
முக்கிய வழித்தடங்கள் மற்றும் நேர அட்டவணை விவரம்
பொள்ளாச்சி – திருப்பூர் (வழி: பல்லடம்)
காலை 4.10 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம் தொடர்ச்சியாக இயக்கப்படுகிறது.
பொள்ளாச்சி – தாராபுரம் (வழி: பெதப்பம்பட்டி, குடிமங்கலம்)
தாராபுரம் செல்லும் நேரம் காலை 5.17, 6.10, 7.25, 9.30, 10.00, 11.30 மற்றும் மதியம் 12.15, 1.30, 2.00, 3.45, 4.25, 5.35, மாலை/இரவு 7.05, 8.15, 8.45, 9.00.
கரூர் செல்லும் நேரம் காலை 6.20, 6.45, 7.50, 8.30, 9.00, 10.45 மற்றும் மதியம் 12.35, 1.10, 2.25, 2.50, 4.05, 4.45, மாலை/இரவு 6.05, 6.35, 8.05, 8.30.
இதர முக்கிய ஊர்களுக்கான பேருந்துகள் (நேரங்கள்)
ஈரோடு காலை 5.15, 5.40, 6.50, 9.40, 12.25 PM, 1.25 PM, 2.40 PM, 3.10 PM, 4.40 PM, 6.00 PM.
சேலம் காலை 5.05, 7.20, 7.50, 8.00, 11.05, மதியம் 2.00 PM, 5.55 PM, 6.40 PM.
கோவை காலை 10.00, மதியம் 3.25 PM, மாலை 6.30 PM, இரவு 7.25 PM.
கொடுமுடி காலை 7.40, மாலை 4.55 PM.
சத்தி மாலை 5.00 PM.
பண்ணாரி காலை 8.26.
அந்தியூர் காலை 10.55.
பாதுகாப்பான பயணம் உங்கள் நலம் எங்கள் கடமை என்ற நோக்கில் இந்தச் சேவைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் கழகம் (கோவை) மற்றும் பொள்ளாச்சி நகராட்சி இணைந்து செயல்படுத்துகின்றன. பயணிகள் அனைவரும் இந்த நேர அட்டவணையைப் பயன்படுத்திப் பயணத் திட்டமிடுதலைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்









