
கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியில் அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் மற்றும் நவீன சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு வி.பி.தலைமையில் நடைபெற்ற துவக்க விழா வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார்,கலந்து கொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.
தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிராந்திய மேலாளர் அபராஜித் சடகோபன் புதிய நவீன சேவை மையத்தை திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில்,விற்பனை பிரிவு ஏரியா மேனேஜர் வினீத்,சர்வீஸ் பிரிவு ஏரிய மேனேஜர் ஸ்ரீனிவாசன்,மற்றும் மதன்,விக்னேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…
10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், வாகன விற்பனை, பழுதுபார்ப்பு மற்றும் அசல் உதிரிபாகங்கள் விற்பனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விழாவின் சிறப்பம்சமாக, ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. வாகனம் பெற்ற ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது.
முன்னதாக அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜு மற்றும் டி.வி.எஸ். பிராந்திய மேலாளர் அபாரஜித் சடகோபன் ஆகியோர் பேசுகையில்,புதிதாக துவங்கப்பட்டுள்ள அஸ்வதா டி.வி.எஸ்.ஷோரூமில், வாடிக்கையாளர்களுக்கு இருசக்கர வாகன விற்பனை முதல் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் வரை ஒருங்கிணைந்த, தரமான சேவையை வழங்குவத்தே முதன்மை நோக்கமாக இருக்கம் என தெரிவித்தனர்.
தற்போது டிவிஎஸ் வாகனங்கள் அனைத்து தரப்பனரும் விரும்பும் வகையில் இருப்பதாகவும்,பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை போலவே டி.வி்எஸ்.நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களும் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவித்தனர்.
கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் சின்னியம்பாளையம், காளப்பட்டி, செட்டிபாளையம், கரூர், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை மற்றும் சேவையை கொண்டுள்ள அஸ்வதா டிவிஎஸ் நிறுவனம், தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்தப் புதிய வளாகத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





