கிராம சபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் பங்கேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்துப் பொதுமக்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டிப் பங்கேற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி செய்திகள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் அருகே குருவார்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டுச் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதே ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. குமராபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டியவாறு வருகை தந்து தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிடம் பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துப் பேசியதாவது: “கிராமசபைக் கூட்டம் என்பது நாடாளுமன்றத்திற்குச் சமமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற சுமார் 50 கிராமசபைக் கூட்டங்களில் எங்கள் கிராமத்திற்கு நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் தாண்டி மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது தமிழக அரசின் கவனத்திற்கோ செல்வதே இல்லை.தமிழக தகவல்கள்

பஞ்சாயத்து நிதியிலிருந்து பட்டியல் இன மக்களுக்கு 30 சதவீதம் செலவிட வேண்டும் என்ற சட்டப்பூர்வ விதிமுறைகள் இருந்தும், அந்த நிதி எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. ஊராட்சியில் குடிநீர்க் கிணற்றைத் தூர்வாரக்கூடப் பொதுமக்கள் ரூ.15,000 வசூல் செய்யும் அவலநிலை உள்ளது.

தொடர்ந்து பேசிய கிராம மக்கள், “நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் எங்கள் கிராமத்திற்குச் சுடுகாட்டு வசதி இல்லை. பிணங்களைச் சாலையோரங்களிலும் ஓடைகளிலும் புதைக்கும் நிலையே நீடிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் ஏற்றப்படாத நிலையில், அதற்கான பராமரிப்புச் செலவு மட்டும் ஆண்டதோறும் கணக்குக் காட்டப்பட்டு வருகிறது.

ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டும் இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஊராட்சியின் ஒரு பகுதிக்கு மட்டுமே அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன” எனக் குற்றம் சாட்டினர். மேலும், கிராமத்திற்குத் தேவையான திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாவிட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் பஞ்சாயத்துச் செயலாளர் தவிர வேறு எந்தத்துறை அதிகாரிகளும் வரவில்லை என்றும், கூட்டம் முடிந்த பிறகே கிராம நிர்வாக அலுவலர் வந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர். மேலும் கூட்டம் முடிந்தவுடன் மக்களிடம் என்ன தீர்மானம் எழுதப்பட்டுள்ளது என்பதை வாசித்து காட்டாமலேயே ஏற்கனவே வாசிக்கப்பட்ட பக்கங்களுக்கு கீழாக பல வரிகள் இடைவெளி விட்டு கையெழுத்தும் கைரேகையும் வாங்கி விடுகின்றனர் என்ன பொதுமக்கள் குற்றச்சாட்டு.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts