
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு மற்றும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை கண்டித்து வால்பாறை நகராட்சி சேர்மன் அழகு சுந்தரம் இடம் புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் உள்ள டெண்டர் கண்காணிப்பாளர்களிடம் கூறிய பொழுது எங்களுக்கு இதற்கு சம்பந்தம் இல்லை. மேல் இடத்தில் நீங்கள் புகார் அளிக்க வேண்டும் என கூறினார்கள். வால்பாறை நகராட்சியில் புகார்கள் தெரிவித்தும் டெண்டர் ஒப்பந்ததாரர்கள் கண்டு கொள்வதில்லை.
இரவு நேரங்களில் அதிக அளவு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள், இரவு நேர வாகன ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் ஆடு மாடுகளும் சுற்றித் திரிகின்றன,
வால்பாறை புதிய பேருந்து நிலையம், கலைக் கல்லூரி சந்திப்பு, காந்தி சிலை, பூ மார்க்கெட், அண்ணா திடல் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள உயர் கோபுர விளக்குகளும் எரிவதில்லை.
இதனை கண்டும் காணாமல் வால்பாறை நகர ஆணையர் மற்றும் ஆய்வாளர் செல்கின்றனர். இந்த செய்தியைக் கண்டாவது நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யக்குமார்.










