
கோவை மாவட்டம் போத்தனூர்: தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிரதமர் அவர்களின் சிறப்புரையை நேரலையில் ஒளிபரப்புதல் மற்றும் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

(31.10.2026) தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி போத்தனூர் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியானது வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டப வளாகம், பட்டணம் ரோடு மற்றும் போத்தனூர் காவல் நிலைய உள்வளாகம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் காவல்துறையினர் திரளாகக் கலந்து கொண்டனர். மேலும், இந்தியப் பிரதமர் அவர்கள் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஆற்றிய சிறப்புரையானது தொலைக்காட்சி மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று தேசிய ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும், தேசிய ஒற்றுமை தினத்தின் முக்கியத்துவம், நாட்டின் ஒருமைப்பாடு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள பொறுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் போத்தனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே தேசிய ஒற்றுமையின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்வாறு தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர் ஈசா









