ஒரு நாள் இலவச புகை பரிசோதனை… கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அசத்தல்….

தேசிய சாலைப்பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கோவை மேற்கின் சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை(மேற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திருமதி. ஆர். பிரதீபா எம்.இ அவர்களின் தலைமையில் கோவை (மேற்கு) வாகனப் புகைப் பரிசோதனை மைய நிலையங்களுடன் இணைந்து வாகனங்களுக்கு ஒரு நாள் முழுவதும் இலவச புகை பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் வாகன ஓட்டிகளுக்கு வாகனப் புகையினால் ஏற்படும் உடல்நல குறைபாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வாகனங்களை முறையாக பராமரித்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 200 வாகனங்களுக்கு இலவச புகை பரிசோதனை மேற்கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக புகை பரிசோதனை நிலையங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts