தூய்மைபணியாளர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் (MDU ACF) மூலம் தீவிர காசநோய் கண்டறியும் முகாம்!

தூத்துக்குடி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், பேரிலோவன்பட்டி காசநோய்பிரிவு சார்பில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,விளாத்திகுளம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைபணியாளர்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் (MDU ACF) மூலம் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது,அதற்கு முன்னதாக அனைவரும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை பேரூராட்சித்தலைவர் அயன்ராஜ்,பேரூராட்சி துணைத்தலைவர் வேல்ச்சாமி தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி துவக்கிவைத்தனர், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார். முகாமில் நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ அலுவலர் சுபலட்சுமி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் சுகாதார ஆய்வாளர் ராஜபிரியன் பேரூராட்சி அலுவலர்கள்,முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணேசமூர்த்தி, சுகாதார பார்வையாளர் அமுதா, நடமாடும் மருத்துவக்குழு, பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அனைத்து MLHP மற்றும் WHV 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts