விளாத்திகுளம் TAF ஐஏஎஸ் அகாடமியில் அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்!!

மாணவர்களுக்கு உரிமைகள், கடமைகள் மற்றும் தன்னம்பிக்கை குறித்து காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி அறிவுரை!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள TAF ஐஏஎஸ் அகாடமியில் நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அரசியலமைப்பின் முக்கியத்துவம், அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி
மாணவர்கள் தங்களது இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு, முறையான திட்டமிடல், நேர மேலாண்மை மற்றும் தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்றும் எடுத்துரைத்தார். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாகக் கருதி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கடமைகள் குறித்து மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பி, அதற்கான விளக்கங்களையும் எடுத்துரைத்தார். அடிப்படை உரிமைகளை அறிந்து செயல்படுவதுடன், சமூக பொறுப்புணர்வுடன் கடமைகளையும் நிறைவேற்றுவது ஒவ்வொரு மாணவரின் முக்கிய பொறுப்பாகும்

சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், நேரில் அறிமுகமானவர்கள் மற்றும் அறிமுகமில்லாதவர்களுடன் சமூக வலைத்தளங்களில் பழகும்போது அவர்களின் உண்மையான அடையாளத்தை அறியாமல் நம்பி ஏமாறக்கூடாது சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தொடர்புகள் ஏற்பட்டு, மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் சூழல் உருவாகாமல் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,

மாணவர்கள் பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடக்க வேண்டும், படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த அரசியலமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வு, சமூக பொறுப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts