குடியரசுத் தலைவர் மாளிகையில் பொள்ளாச்சி இயற்கை விவசாயிக்குக் கௌரவம் அட் ஹோம் நிகழ்வில் சரவணன் (𝙳𝙴𝙴𝚂𝙰𝙽 𝙵𝙰𝚁𝙼𝚂) குடும்பத்தினர் பங்கேற்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே தமிழக – கேரள எல்லையான மீனாட்சிபுரத்தை அடுத்த ராமர் பண்ணை பகுதியில் இயற்கை விவசாயத்தைத் தவமாக மேற்கொண்டு வரும் திரு. சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் – டீசன் பார்ம்ஸ் (𝙳𝙴𝙴𝚂𝙰𝙽 𝙵𝙰𝚁𝙼𝚂) தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் மண்ணின் வளம் சிதைவதைத் தடுத்து அதை மீட்டெடுக்கும் நோக்கில் திரு. சரவணன் தனது நிலத்தில் முழுமையான இயற்கை விவசாயத்தைத் தொடங்கினார். இன்று அவரது பண்ணை பசுமை போர்த்திய ஒரு முன்மாதிரித் தளமாகத் திகழ்கிறது.

இந்த வெற்றியின் பின்னணியில் ஒரு தனிமனிதராக மட்டுமல்லாமல் ஒரு குடும்பமாகவே அவர்கள் ஒன்றிணைந்து உழைப்பதுதான் தனிச்சிறப்பு பயிர்களுக்குத் தேவையான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் மற்றும் மூலிகைப் பூச்சி விரட்டிகளை அவர்களே தயாரித்துப் பயன்படுத்துகின்றனர். மண்ணின் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம் விளைச்சலின் தரம் அதிகரிப்பதோடு நிலமும் ஆரோக்கியமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களை நாடி வரும் சக விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு இயற்கை விவசாய நுணுக்கங்களைச் சளைக்காமல் கற்றுத் தந்து ஒரு வழிகாட்டியாகவும் அவர்கள் விளங்குகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் (Rashtrapati Bhavan) புகழ்பெற்ற அட் ஹோம் (At Home) வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்கள் மட்டுமே அழைக்கப்படும் இந்த உயரிய நிகழ்வில் பங்கேற்க டீசன் பார்ம்ஸ் (𝙳𝙴𝙴𝚂𝙰𝙽 𝙵𝙰𝚁𝙼𝚂) குழுவினருக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி, துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சர்வதேசப் பிரதிநிதிகளான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா ஆகியோரும் இவ்விழாவில் சிறப்பம்சமாகத் திகழ்ந்தனர்.

இது குறித்து டீசன் பார்ம்ஸ் (𝙳𝙴𝙴𝚂𝙰𝙽 𝙵𝙰𝚁𝙼𝚂) தரப்பில் கூறுகையில்;
​குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் பங்கேற்பது எங்களுக்குப் பெருமிதம் அளிக்கிறது. இந்த அங்கீகாரம் இயற்கை விவசாயத்தின் மீதான எங்களது பொறுப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்ப இளைஞர் சக்தியும் இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்த வரவேற்பு நிலையான விவசாய முறைக்கும் ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பிற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்தனர்.

மண்ணைக் காத்து நஞ்சில்லா உணவைப் படைப்போம் வருங்கால சந்ததிக்கு இயற்கை விவசாயம் வழியே வளமான வாழ்வை அளிப்போம் என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts