
கோவை மாவட்டம் பொள்ளாச்சி,வால்பாறை, உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழக முதல்வருக்குத் தார்மீகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து இயற்கை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிறுவனர் மா. வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நீண்ட நெடுங்காலமாக பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைப் பழனியுடன் இணைத்துப் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளதாக வரும் செய்திகள் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்த உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகள் திருப்பூருடன் இணைக்கப்பட்டன. தற்போது இப்பகுதிகளை மீண்டும் பொள்ளாச்சி கோட்டத்துடன் இணைத்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
வால்பாறையிலிருந்து கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சுமார் 125 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்குச் சுமார் 6 மணி நேரம் வரை செலவாகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வால்பாறையை வந்தடையவே 2 மணி நேரமாகிறது. அங்கிருந்து கோவை செல்ல வேண்டும் என்றால் மொத்தம் 8 மணி நேரப் பயணம் தேவைப்படுகிறது.
இதனால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டாலும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடியாத அவல நிலை நீடிக்கிறது.
பழங்குடியின மக்கள், வால்பாறை மக்கள் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சி மாவட்ட உருவாக்கத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தைக் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கொண்டு வந்து இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கனவை நனவாக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.











