ஆனைமலை பூச்சனாரி பகுதியில் குப்பைகள் தேக்கம் – சுகாதார சீர்கேடு அபாயம்!!

ஆனைமலை மீன்கரை ரோடு பூச்சனாரி பகுதியில் கடந்த சில தினங்களாக துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளைச் சேகரிக்க வராததால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பகுதியில் சிறிய இடைவெளி நாட்களில் வீடு வீடாக வந்து குப்பைகளைச் சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பொதுமக்கள் துப்புரவுப் பணியாளர்களிடம் கேட்டபோது குப்பை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு வாகனங்களும் பழுதடைந்துள்ளதாகவும் அதனால் தற்போதைக்கு வர முடியாது என்றும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஒவ்வொரு வீட்டின் முன்பும் கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன வெயில் மற்றும் காற்றில் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுவதுடன் ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். குப்பைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மாற்று ஏற்பாடுகளைச் செய்து உடனடியாகப் பழுதடைந்த வாகனங்களைச் சரி செய்யவோ அல்லது வேறு வாகனங்களைப் பயன்படுத்தியோ குப்பைகளை அகற்ற துறை சார்ந்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பூச்சனாரி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts