
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிப்பாளையம் சாலையில் இருபுறமும் குப்பைகள் குவித்து வருகின்றது.
குறிப்பாக ஈஸ்வர் நகர்,வடிவு நகர், பைந்தமிழ் நகர், ஜே ஜே நகர், ஆறுபடை நகர் கிருஷ்ணா நகர்,SI நகர் சங்கமம் நகர்,தில்லை நகர் ஆகிய பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகள் தினமும் குவிந்து வருகிறது.
அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபர்களும் குப்பைகளை சாலையில் வீசிக் கொண்டு செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்க கூடிய இந்த செட்டிப்பாளையம் சாலையில் ,தினமும் 20 க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி வாகனங்கள் செல்கின்றனது.
100 க்கும் மேற்பட்ட லாரிகள்,பேருந்துகள் செல்கின்றனது. அனைத்தும் குப்பைகள் நடுவே வாகனத்தை இயக்கி வருவதால்,பெரிய விபத்துக்கள் நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என அப்பகுதி மக்கள் அச்சப் படுகின்றனர்.
மேலும் செட்டிபாளையம், வெள்ளலூர், பேரூராட்சிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சரியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து விபத்துகள் தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஹரிகிருஷ்ணன்.V
பொள்ளாச்சி – கோவை மாவட்டம்.











