
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தினை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ,மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி கல்வெட்டினை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர்,மகளிர் திட்டம் நாகராஜன் செயற்பொறியாளர் முருகன் ,புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,தினகரன் ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன் புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் , ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, அன்புராஜன்,புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், வார்டு உறுப்பினர் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள் ,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ,புதூர் கிழக்கு ஒன்றிய பாக முகவர்கள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











