வால்பாறையில் வணிகர் சம்மேளன செயற்குழு கூட்டம்! – மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரிக்கை!!

பொள்ளாச்சி வால்பாறை வணிகர் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் நகரத் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய எளிமையின் சிகரமாக விளங்கிய தோழர் நல்லக்கண்ணு அவர்களின் மறைவிற்கு இரங்கலும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையைச் சேர்ந்த தோழர் P.பரமசிவம் அவர்களை மாநில கொள்கை பரப்புச் செயலாளராகவும் சரவணன் அவர்களை மாநில செயற்குழு உறுப்பினராகவும் நியமித்து பதவி உயர்வு அளித்த மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இக்கூட்டத்தில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
​வால்பாறை பகுதியில் போதிய மாற்றுத் தொழில் இல்லாமலும் குறைந்த ஊதியத்திலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வால்பாறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.
​நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை இடிக்காமல் இருக்கும் கடைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். இதன் மூலம் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நகராட்சி நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்.

இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் ரவீந்திரன், தொகுதி செயலாளர் இப்ராஹிம், தொகுதி ஒருங்கிணைப்பாளர் மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், வணிகர் சம்மேளன நிர்வாகிகள் மாடசாமி, சுரேஷ், பாலமுருகன், செல்வகுமார், நித்தியா, ஜோதி, வேலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts