
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம விலங்கு ஒன்று தாக்கியுள்ளது. திங்கட்கிழமை காலை பார்த்தபோது ஆடுகள் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் அங்குள்ள கால் தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இது சிறுத்தையின் தாக்குதலா அல்லது வெறிநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து செய்த வேலையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே இரவில் 25 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.





