தேர்தல் விதிமுறை மீறல்? டாஸ்மாக் ஊழியர் ‘செய்தியாளர்’ அவதாரம் – தூத்துக்குடி மக்கள் தொடர்பு அதிகாரி அனுமதிப்பாரா?!!

​தூத்துக்குடி: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசுத் துறையைச் சேர்ந்த TASMAC சேல்ஸ்மேனாக பணிபுரியும் ஊழியர் ஒருவர் தன்னைச் செய்தியாளர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு தேர்தல் செய்திகளைச் சேகரிக்க முயல்வது தூத்துக்குடி மாவட்ட ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ​

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், செய்தியாளர்கள் தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அங்கீகார அட்டை அவசியமாகும். தான் ஏற்கனவே பத்திரிக்கையாளர்களின் பஸ் பாஸ் வைத்துள்ளதாகவும் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தார்மீக மற்றும் சட்ட விதிகளுக்குப் புறம்பாக தன்னை ஒரு ‘செய்தியாளர்’ என்று கூறிக்கொண்டு தேர்தல் களத்தில் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் வலம் வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts